பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு – ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது.

பாமக பொறுப்பாளர்கள் வாசுதேவன், கபிஸ்தலம் சிங்காரம், அய்யம்பேட்டை தமிழ்ச்செல்வன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் பாபநாசம் நகர பொறுப்பாளர் சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் , ஆடுதுறை பேரூராட்சி மன்ற பெருந்தலைவருமான ம.க. ஸ்டாலின், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.வீ.சங்கர், வன்னியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் எம். ராஜசேகர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ், குமார், வினோத் சுந்தரம் , விஜயராஜன், பன்னீர்செல்வம் , க.கருணாகரன், தங்க. ராஜேந்திரன், தமிழரசன், அம்மாபேட்டை ராம்குமார், அண்ணாதுரை, வடுவையா, மெலட்டூர் சுப்ரமணி, அய்யம்பேட்டை முரளி, காளிதாஸ் , மனோகர், அழகேசன், ராமகிருஷ்ணன், விஜய் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது…

பாபநாசம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதில் பாகுபாடு உள்ளது. விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் ,

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் பாதியளவிற்கு கூட இயங்கவில்லை, மாணவர்களும், பொதுமக்களும் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது அனைத்து பேருந்துகளும் உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

தமிழக அரசு பாபநாசம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு – ராமநல்லூர் இடையே உயர்மட்டப்பாலம் கட்டாமல் காலதாமதம் செய்து வருகிறது உடனடியாக பாலம் கட்டவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்த நேரிடும் எனவும்,

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து கிளைகளிலும் மருத்துவர் அய்யாவின் அறிவுறுத்தலின்படி கிளைக் கூட்டம் நடத்தி பாமக கொடியேற்றுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.அடுத்த மாதத்தில் தமிழகத்தின் எழுச்சி நாயகர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அழைத்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் ,

பாபநாசம் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகள் வழிபாட்டுத்தலங்கள் அவற்றின் அருகே உள்ள மதுபான கடைகளை அகற்றியும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

முடிவில் வழுத்தூர் அறிவு நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *