வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 67 -ஆவது திரைப்படம் “லியோ” மாபெரும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி என். ஆனந்த் உத்தரவின்படி, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய தலைவர் ஆர். எஸ். விஜய், மேற்கு ஒன்றிய தலைவர் எஸ். நெப்போலியன், நகரத் தலைவர் டி. எம் .என். மனோஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு, தளபதி விஜய் நடித்த 67 -ஆவது திரைப்படமான “லியோ” மாபெரும் வெற்றி பெற வேண்டி மகா மாரியம்மனுக்கு பட்டுப்புடவை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து அன்னதானமும், வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *