ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ் 0 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ் 0. முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் (16.10.2023) முதல் 31.10.2023 வரை 10 ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது.

முகாமிற்கு முட நீக்கியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மன நல மருத்துவர் கண் மருத்துவர் மருத்துவ உளவியல் நிபுணர், செவித்திறன் ஆய்வாளர் மற்றும் கண் பரிசோதனை ஆய்வாளர் ஆகியோர் சார்ந்த மருத்துவ குழு மாற்றுத்திறன் குழந்தைகள் மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து மற்றும் ரயில் பயணச்சலுகை, தேவையான உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

முகாமில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகள. இல்லம் சார்ந்த குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்திற்கு வரும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடையலாம்
நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி சுப்ரமணியன் ஊராட்சி மன்றத்தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலாக்ள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *