சிவகங்கை மாவட்ட ஆட்சியர் “விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மருது பாண்டியர்களின் குரு பூஜை அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம் உட்பட 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் மருது சகோதரர்கள். இவர்கள் இருவரும் சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள்.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்ட வேண்டும் என அவர்களை எதிர்த்து போரிட்டனர். இதனால் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள். 3 நாட்கள் கழித்து இவர்களது சடலங்கள் இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இவர்களுடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *