அரசு பள்ளியில் அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் 92 வது பிறந்த நாள் நிறைவு விழா!

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் நிறைவு விழா தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

“காலம் போற்றும் கலாம்” தலைப்பில் பேச்சுப் போட்டி அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்ற 2023 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் மரக்கன்றும் விருட்சா அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சிதா அவர்கள் தலைமை மூலம் வழங்கப்பட்டது. தனித்திறன் கொண்ட மாணாக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக “காலமெல்லாம் கலாம்” புத்தகமும் வழங்கியது சிறப்பிற்குரியது. விருட்சா அறக்கட்டளையின் அப்துல் கலாம் நிறைவு விழாவில் 100 தனித்திறன் கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகமும் கல்வி உபகரணங்களும் விருட்சா அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சிதா ஏற்றம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரவிசங்கர் கதிர்வேலு உதவியுடன் வழங்கினார்.

123 மரக்கன்றுகளை கொடை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்த்திக் திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தி திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். 1100 மரக்கன்றுகள் குடுத்து உதவிய ஆசிரியர் தென்னவன் மற்றும் 700 சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் குடுத்து உதவிய விருட்சா அறக்கட்டளை நன்கொடையாளர்
களுக்கும் நன்றி தெரிவித்து, இன்றோடு 2023 தனித்திறன் கொண்ட மாணவர்களுக்கு 2023 கலாம் புத்தகமும் 2023 சான்றிதழ்களும்2023 மரக்கன்றுகளையும் அளித்து விழாவை நிறைவு செய்தார்.

விருட்சா அறக்கட்டளையின் நிறுவனர் ரஞ்சிதா தீபாவளி திருநாளை முன்னிட்டு23 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவும் 523 ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு புத்தாடையும் புறவலர்களுடன் இணைந்து வழங்கிட உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *