ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.

திருவாரூர் நேரு யுவ கேந்திரா சுதந்திர அமுத கலச யாத்திரை இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் இருந்து அமுத கலசத்தில் மண் சேகரிக்கப்பட்டு ஒன்றியம் ,மாவட்டம்மற்றும் மாநில அளவில் கொண்டு செல்லப்பட்டு தேசிய தலைவர்களின் நினைவாக சுதந்திர அமுத தோட்டம் புது டெல்லியில் உருவாக்கப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்திரை பேரணி (Amrit Kalash Yatra)நிகழ்ச்சி 19.10. 2023 அன்று செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை செங்கமல தாயார் மகளிர் கல்லூரி முதல்வர் N. உமா மகேஸ்வரி தலைமையேற்று பஞ்சபிரான் உறுதிமொழி கூறி துவங்கி வைத்தார் நிலம் கையகப்படுத்துதல் தாசில்தார் மன்னார்குடி நாகராஜ் சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் நோக்கத்தினை பற்றி திருவாரூர் நேரு யுவ கேந்திரா திட்ட அலுவலர். R.பாலகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஆ பிரபாவதி ர. மாலதி க.தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்,அஞ்சல் துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்

மேலும் தஞ்சை காமாட்சி கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் மற்றும் தேசிய இளைஞர் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக நிறைவு பெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *