கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கோவை ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பத்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்து நேற்று மாலை சுமார் மூன்று மணியளவில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து சுங்கப் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அப்பகுதியிலுள்ள சூழல் ஒருவரை இழுத்துள்ளது அவரை காப்பாற்ற கரம் கொடுத்த மேலும் நான்கு பேர்களும் நீரில் இழுக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

தகவலறிந்த வால்பாறை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவம் பகுதிக்கு விரைந்து சென்று உயிரிழந்த கோவை தாமரை குளத்தை சேர்ந்த சரத் 20, உக்கடத்தை சேர்ந்த நஃபேல் 20, கிணத்துக்கடவு மணிக்கண்ட புரத்தை சேர்ந்த தனுஷ் குமார் 20, அஜய் 20 ,வினித் 23,ஆகிய ஐந்து கல்லூரி மாணவர்களின் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் உடற்கூறு ஆய்விற்க்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்நிலையில் இந்த துயரச்சம்பவத்தை அறிந்த தமிழக வீடாடுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்க் கொண்டு உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

இச்சம்பவம் வால்பாறை பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவப் பகுதியில் பெரும் முயற்சியோடு துரிதமாக செயல்பட்டு ஐந்து பிரேதங்களையும் கைப்பற்றிய வால்பாறை தீயணைப்பு துறை வீரர்கள்,காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *