நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நலிவுற்ற நாடக நடிகர் மாரிமுத்து, நாடக நடிகை விஜயமாலா அவர்களுக்கு நகைச்சுவை மன்ற தலைவரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், இயக்குனரும், நடிகருமான தமிழ்ப் பேச்சு ராஜ்மோகன் இணைந்து விருதும், ரொக்க பணம் பரிசாக வழங்கினார்கள்.

உடன் அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மெய். பாலராமலிங்கம், பள்ளி தாளாளர் டாக்டர் பால. கார்த்திகேயன் உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஊழியர்கள் செய்தனர். அனைவருக்கும் உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *