மின் கட்டண உயர்வுக்கு எதிராக எம்.எல்.ஏ க்களிடம் கோரிக்கை மனு;-

தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தலைவர் அன்பழகன் அவரது அறிக்கையில் கூறியுள்ளவாறு;-

தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே முதல்வர் நேரடியாக தலையிட்டு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

என்று கோரி தமிழ்நாடு தொழில்துறை
மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் தொழில் அமைப்புகள் சார்பாக முதல் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

பின்னர் அது தொடர்பாக போராட்டங்களை நடத்தினோம் இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எங்களது கோரிக்கைகளில் நிலை கட்டணம் குறைப்பு மிக முக்கியமானது.

மேலும் பீக்ஹவர் கட்டணம். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 6% மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தொழில் மின் நுகர்வோர் கூட்டமைப்பு 6-11-2023 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சார்ந்த தொழில் அமைப்புகள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து சட்டமன்றத்தில் மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்திட கவனார்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும்,அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலம் பேணிடவும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்திடவும். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்திட தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி மர வியாபாரிகள் மற்றும் மர அறுவை ஆலைகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம், மாவட்ட சிறு கனிமம் மற்றும் கல் உடைக்கும் தொழிற்சாலை சங்கம், மாவட்ட ஓடு மற்றும் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம், செங்கோட்டை மர வியபாரிகள் மற்றும் மர அறுவை ஆலை சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் தலைவர்கள். நிர்வாகிகள்.
மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.என தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *