பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் -நடிகை ஓவியா பங்கேற்பு….

ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் சௌபா பகுதியில் உள்ள ஜெம்ஸ் வெள்ளிங்டn இன்டர்நேஷனல் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் .ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டம் பல்வேறு ஆடல், பாடல், மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகளின் தனித்திறமைகள், ஆடல்,பாடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு ஜெகநாதன் மற்றும் ரம்யா தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக தமிழ் நாட்டில் இருந்து நடிகை ஓவியா கலந்துகொண்டார் ..

மேலும் சிறப்பு விருந்தினர்களாக டிவிஎஸ் ஹைதர் அலி,எஸ் ஆர் எம்இன்டர்நேஷனல் மதன்உஷா,அல் சஃப்யா ரேடியாலஜி சென்டர் டாக்டர். ரூபா , ரோமனா ,Dr. மீனா, , டிஇபிஏ பால் பிரபாகர், சல்வா குரூப் பகவதி ரவி, ஜிபி ப்ரோடக்சன் பிரசாத், கோகுல் ஏடுபி ராஜு, , பாளையங்கோட்டை ரமேஷ்,எமிரேட்ஸ் நியான உஸ்மான் அலி, உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் டாக்டர் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கும் , ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *