புதுச்சேரி திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்களிடம்
திமுக இளைஞர் அணி மாநாடு அழைப்பிதழ்
இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபு வழங்கினார் !

தமிழ்நாடு முதல்வர், தி.மு.கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில் இம்மாதம் 24.12.2023 அன்று சேலத்தில் நடைபெறும் கழக இளைஞர் அணியின் 2–வது மாநில மாநாட்டு அழைப்பிதழை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சார்பில், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் க. பிரபு அவர்கள் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்களுக்கு வழங்கி, மாநாட்டிற்கு புதுச்சேரி மாநில கழகம் சார்பில் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அப்போது, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல் சம்பத், எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், தியாகராஜன், தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், தாமரைக்கண்ணன், தமிழ்பிரியன், கிருபாசங்கர், சந்துரு, அகிலன், உத்தமன், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நவீன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் சேட்டு என்கிற வேல்முருகன், உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார், கிளைச் செயலாளர்கள் அகிலன், அன்பு, கிரி, நெல்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *