திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்

தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர்நதிட. வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற. புதிய. திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகராட்சி வார்டு எண. 8,9,14,16,17 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்திடும் வகையில் மின்சார வாரியம் நகராட்சி நிர்வாகம் வருவாய் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை காவல்துறை மாற்றுத்திறனாளிகள் துறை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற துறையினரும் ஒரே இடத்தில் முகாமிட்டு கோரிக்கைகளை பெற்று அதற்கான தீர்வினை வழங்கிட ஏதுவாக இந்த முகாம் நடைபெறுகிறது பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை உடனடியாக. கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் சான்றிதழ் தேவைப்பட் டால் முகாம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கியதனையும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
முகாமில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில் நகராட்சி ஆணையர் மல்லிகா நகர்மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் எஸ் என் அசோகன் வாரை பிரகாஷ் சசிகலா சித்திவிநாயகம் அன்பழகன் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *