கனமழையால் பாதிக்கப்பட்ட விவசயிகள்
வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்கள் தள்ளுபடி செய்யப்படவேண்டும்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை:-

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின்
தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களை பார்வையிட்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் மழை வெள்ளத்தில் கால்நடைகளை இழந்து பிழைப்புக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு தமிழக முதல்வர இலவச கால்நடைகளை வழங்க வேண்டும் கால்நடைகளை வைத்து வங்கிகளில் கடன் வாங்கியவர் களின் கடன்கள் மற்றும் அனைத்து விவாசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் வீடுகளையும் வாகனங்களையும் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரணம் மக்களுக்கு போதுமானதாக இருக்காது

வெள்ளநீரும் வடியாமல் பல இடங்களில் தேங்கி கிடக்கின்றது கிராமங்களில் நோய்கள் பரவாமல் இருப்பதற்கு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்ள அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் கடைகளில் பொருட்களை இழந்து தவிக்கின்ற வியாபாரிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா கடன்கள் கொடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்

பொது மக்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக கொடுக்கப்பட துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறினயுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *