ஏசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூரும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

மேலும் பாடல்கள் பாடுவது, வீடு களில் குடில்கள் அமைத்து தினமும் பிரார்த்தனை செய் வது என கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் எப் போதும் உற்சாகமாக நடைபெறும்.

இதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த வர்கள் ஊர்வலமாக செல்வது வழக்கம்.

தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் காமராஜர் சாலையில் தூய அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ் வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஊர்வலம் நடப்பது வழக்கம்.

அதன்படி நேற்று பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா மற் றும் ஊர்வலம் நடந்தது. விழாவிற்கு முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய பங்கு தந்தை பிலோமின் தாஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் பேரா லயத்தில் இருந்து தொடங்கி பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *