கோவை

பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகம் – கோவை விழாவில் வண்ண விளக்குகளால் தாஜ்மஹால் போல் ஜொலித்ததை வியப்புடன் பார்த்துச் சென்ற மக்கள்..

கோயம்புத்தூரில் உள்ள மக்களை மகிழ்விக்கும் விதமாக அரசுடன் இணைந்து தனியார் அமைப்புகள் ஆண்டு தோறும் கோவை விழா பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 16வது ஆண்டாக கோவை விழா ஒரு வார விழாவாக நகரம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.

இந்த ஆண்டு நகரத்தில் உள்ள சின்னமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தின் கம்பீரத்தை காட்சிப்படுத்த தேர்வு செய்தனர். 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் ஒளி மற்றும் ஒலி காட்சியை ஏற்படுத்தினர். இசையுடன் கூடிய வண்ணமயமான

இந்த ஒளி மற்றும் ஒலி நிகழ்வை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.மாதேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரண்மனை தாஜ்மஹால் போல் இருக்கும்,இந்த காட்சிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *