வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு 3000 கன அடி நீர் திறப்பு.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் இராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு திறந்து விடப்பட்டது தற்போது கோடை காலத்தில் இதுவரை கண்டிராத கடும் வெப்பம் இந்த ஆண்டு கொளுத்தியது இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் அனைத்தும் வறண்டு விட்டது.
குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது இதனால் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதன் காரணமாக இராமநாதபுரம் சிவகங்கை மதுரை ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக கண்மாய்களில் தண்ணீர் வேண்டுமென இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டது
அதன் பேரில் வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டது வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் மதகுகளின் பொத்தான்களை அழுத்தி திறந்து வைத்தார் வைகை அணியின் சிறிய மதகுகளில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீருக்கு மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்