பழைய வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க கோரி மினி பஸ் ஊழியர்கள் போராட்டம்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 15- க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த மினி பஸ்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வரைய றுக்கப்பட்ட பழைய மீன் மார்க்கெட் வழியாக கும்பகோ ணம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வது வழக்கம்.இந்த நிலையில் போக்குவரத்து விதிகள் மாற்றப்பட்டு மினி பஸ் கள் நால்ரோடு வழியாக செல்வதற்கு புதிய வழித்தடங் களில் செல்ல போலீசார்கள் அறிவுறுத்தி வந்தனர். மினி பஸ்கள் வழக்கமாக செல்கின்ற மீன் மார்க்கெட் வழியாக வழியை பின்பற்றி சென்று வந்தன.

இதனைக் கண்டித்த போக்குவரத்து போலீசார் விதிகளை மீறிய மினி பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மினிபஸ் ஊழியர்கள் பழைய வழித்தடத் திலேயே இயக்க அனுமதிக்ககோரி புதிய பஸ் நிலையத்தில் தங்களது பஸ்களை இயக்காமல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மேற்கு போலீசார் மினி பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படவே மினி பஸ் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *