தஞ்சையில் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தை உடனடியாகத் திறந்து இழப்பீடு விரைவில் பெற வலியுறுத்துகிறேன் -ஏகேஆர் ரவிச்சந்தர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
தீபக் ஜேக்கப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேசினர்

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் பேசியதாவது

பயிர் காப்பீடு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல குளறுபடிகள் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்கள் என்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், இழப்பீட்டை விரைவில் பெற்று தர ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரில் தஞ்சாவூர் மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரில் காப்பீடு நிறுவன அலுவலகத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்துகிறேன். நிறுவன அலுவலகத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கிறது பார் வசதி இல்லாத தமிழ் குடிமகன்கள் சாலை ஓர் வேளாண்மை விளைநிலங்களில் பாட்டிலை வீசி வருவதால் விவசாயிகள் ரத்தம் சிந்தும் நிலையை அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். ஜனவரி 19ம் தேதி முதல் திருவாரூர், நாகை, குமரி, தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரூ.10/- கொடுத்து காலி மது பாட்டிலை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அரசு அறிவித்துள்ளது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் தலைநகர் தஞ்சாவூரில் மேற்படி திட்டத்தை அமல்படுத்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும்

+தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கைரேகை பதிவாகாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரூ.1000 பெற முடியாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஊராட்சியிலும் 30 நபர் முதல் 60 நபர் வரை கைரேகை வரவில்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் கிட்டத்தட்ட நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் 15000 குடும்பங்கள் மேற்படி பொங்கல் தொகுப்பை பெறவில்லை. உணவுத்துறை அமைச்சர் கைரேகைக்கு பதில் கண்விழி பயன்படுத்த போவதாக அறிவித்திருந்தார். இன்னும் செயல்படுத்தவில்லை. உழைத்து உழைத்து கைரேகை அழிந்து போன வயது முதிர்ந்து விவசாயிகள் கூலிகளின் நிலை கருதி விடுபட்ட அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு செய்திதாளில் அறிவிப்பு வெளியீடுகிறார்கள் பலருக்கு கடிதம் மூலமும் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முகநூல் (Facebook) புலனம் பகிரி (Whatsapp) மூலமும் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முகநூல் பக்கத்தில் தினமும் மக்கள் தொடர்பு அதிகாரி பதிவிடுகிறார்கள். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் கூட்டத்திற்கு whatsapp மூலமும் செய்தி அழைப்பு வருகிறது. எனவே இக்கூட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை பதிவேட்டில் அலைபேசி எழுதி கையொப்பம் பெற்றுள்ளனர் எனவே வாட்ஸ் அப் மூலமும் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சம்மந்தமாக உணவுத்துறை செயலாளர் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் தஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கம் மேற்படி கூட்டத்தை உடனே நடத்த அரசுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன் என்ன பலவேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.

தொடர்ந்து நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *