திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் இஸ்லாமியர்கள் தாம்புல தட்டுடன் தருமபுரம் ஆதீனம் மத நல்லிணக்க சந்திப்பு.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கக்கூடிய இக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 2 ந் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி எட்டு கால யாக பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.

கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு திருபுவனம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில்
பள்ளிவாசல்
தலைவர் தாஜ்தீன் தலைமையில், நிர்வாகிகள்
ராசுதீன், அலாவுதீன் ஹிபாயத்துல்லா, நசீர் அகமது, அப்துல் மஜீத், முஹம்மது அன்சாரி, சேக்அலாவுதீன் ஆகியோர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு
தருமபுரம் ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் நேரில் சந்தித்து மத நல்லிக்கனத்தை பேனும் வகையில் இஸ்லாமியர்கள் தாம்பூலத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக எடுத்துச் சென்று
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் வரவேற்று இஸ்லாமியர்களுக்கு சால்வை மற்றும் அன்புகளை பரிமாறும் பரிசுகளை வழங்கினார்.

இது குறித்து ஜமாஅத்தார்கள் கூறுகையில்:-

மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். பண்டிகையின் போது மட்டுமல்லாமல் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம், நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம்.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில்
கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *