மதுரையில் சாலைப்பாதுகாப்பு மாதம் 17வது நாள் நிகழ்ச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் இணை ஆணையர் குமார் மற்றும் மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் ஆகியோர் இணைந்து தமுக்கம் மைதானம் முன்பாக சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கர தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். .

இப்பேரணியில் இரு சக்கர வண்டிகளில் தலைக்கவசத்துடன் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் பொறுத்திய வண்ணம் போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், மதுரை மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தலைக்கவசம் உயிர்கவசம். தலைக்கவசம் அணிவீர் தலைமுறை காப்பீர், படியில் பயணம் நொடியில் மரணம், நான்கு சக்கரவாகனத்தில் சீட் பெல்ட் அணிவீர் என விழிப்புணர்வு பதாதைகளுடன் கோஷமிட்வாறு சென்ற பேரணியானது கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், ஆவின், கே.கே. நகர், மாவட்ட நீதி மன்றம் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.

முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட காவல்துறை ஆணையர் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய மஞ்சள் துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்கி சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்க்கொள்ளும் படி கூறினார்.
இப்பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் வடக்கு மற்றும் மையம் சித்ரா, தெற்கு சிங்காரவேலு மற்றும் காவல்துறை துணை இணை ஆணையர் திருமலைக்குமார், காவல்துறை உதவி ஆணையர்கள் மாரியப்பன், செல்வின் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, சரவணக்குமார், செல்வம், வாடிப்பட்டி அனிதா, மனோகரன் ஆகியோர் இணைந்து மதுரை மாவட்டத்தில் “தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்” விழாவினை பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *