கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்காண விவசாய நிலங்கள் கையப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான இழப்பீட்டினை, 4 வழி மற்றும் 6 வழி சாலை கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஒதுக்கிய தொகையினை இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என தமிழக அரசிற்கு கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வாயிலாக முறையிட்டனர்.

இந்த நிலையில் பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா, தலைமையில் வட்டாட்சியர் பாக்கியராஜ், துணை வட்டாட்சியர்கள் விநாயகம், ராஜ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், கலியபெருமாள், கலைமணி, மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்
உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில், ஆதனூருக்கும், குமாரமங்கலத்திற்கும் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைத்து வருகிறது இதற்காக தஞ்சை மாவட்டம் அணைக்கரைக்கு அருகில் உள்ள வேட்டமங்கலம், திட்டச்சேரி, மதகுசாலை, குலசேகரநல்லூர், மணக்குன்னம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் விளை நிலங்கள் கையப்படுத்தப்பட்டு வருகிறது,

இதற்காக வழங்கப்படும் இழப்பீட்டினை தமிழக அரசு, 4 வழி மற்றும் 6 வழி சாலை பணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டிற்கு இணையாக வழங்க வேண்டும் என்றும், கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள மின் மோட்டார் பம்புசெட்கள், மரங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறு, குடியிருப்புகள் முறையாக கணக்கெடுப்பு செய்யாததால் பெரும் குளறுபடி உள்ளதால், அதனை முறையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும், இதில் பாதிக்கப்படும் 4 குடியிருப்பு மனைதாரர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்று கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் முன் வைத்தனர். இதனையடுத்து தமிழக அரசிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கருத்து கேட்பு கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *