ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டம் அறப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட உயர் கல்வி வழிகாட்டுதல் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி குறித்து புத்தகங்களை வழங்கினார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்
ச. வளர்மதி .
இந்த நிகழ்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வருவாய் மாவட்டத் திறன் பயிற்சி நிலைய உதவி இயக்குனர் பாபு கல்லூரி தலைவர் ராமதாஸ் செயலாளர் தாமோதரன் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.