தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் வேளாண்மை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2-கோடியே
75 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கான
அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி
தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில்
வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (ஓய்வு) ஊமத்துரை, வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன், ஆகியோர் முன்னிலை வகித்தார். ,

ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கான பணியினை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வேளாண்மை அலுவலர் சண்முக பிரியா , ஊத்துமலை துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், புஸ்பமாரி , மணிகண்டன், கஸ்தூரி, சுமன், உதவியாளர் (பிணையம்) குமரேசன்,
இளநிலை உதவியாளர் முருகேசன் தட்டச்சர் முத்தரசி,வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி,
உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வகணேஷ் , விற்பனை உதவியாளர் சிவமுருகன், தோட்டக்கலை அலுவலர் ஜீனத்பேகம்,உதவி தோட்டக்கலை அலுவலர் ராமலட்சுமி ,வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் ,
பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ஷரிதா ,
முன்னோடி விவசாயிகள் மழைச்சாரல் ஆர்கானிஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துணை சேர்மன்
ஹரி ரங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில துணைத்தலைவர்
எம் கண்ணையா ,ஆலங்குளம் விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் அருணாச்சலம்,தங்கப்பாண்டி
புதுப்பட்டி ஆசீர்வாதம், தட்டப்பாறை சுப்பிரமணியன்,உள்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *