தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மருதம்புத்தூர் ஊராட்சியில் ஊர் பொதுமக்கள்
நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.48,00,000 லட்சம் மதிப்பீட்டில் மருதம்புத்தூர் -சிவலார்குளம் விளக்கு வரை மெட்டல் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா
நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம். திவ்யா மணிகண்டன் தலையேற்று இப்பணிக்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பூசத்துரை,
துணை தலைவர் கோ. ரெஜினா கோடிஸ்வரன்,
ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா சுதகர்,சண்முகராம்,
கிளை நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி,சுப்பையா,
பிச்சைத்துரை நாகராஜ், சுப்பிரமணியன்,
மருதம்மாரி,காளைப்பெருமாள்,புதுப்பட்டி ஆசிர்வாதம் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,
ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.