விவசாயிகளை வேதனையில் ஆழ்த்திய வெத்து வேளாண் பட்ஜெட்

தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது

தமிழ்நாடு அரசு வேளாண்துறைக்கு நான்காவது முறையாக தனி நிதி நிலை அறிக்கை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்திய வெத்து நிதிநிலை அறிக்கை திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையில் நெல் குவின்டாலுக்கு ரூபாய் 2500 மற்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 என்ன வாக்குறுதி கொடுத்துவிட்டு நான்காவது ஆண்டு பட்ஜெட்டில் கூட அதை அறிவிக்கவில்லை மாறாக கரும்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 190 இருந்ததை ரூபாய் 25 உயர்த்தி ரூ 215 என அறிவித்திருக்கிறார்கள் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் டெல்டாவில் பல்வேறு இன்னல்களில் தண்ணீர் இன்றி கண்ணீரில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை தரமான விதை இல்லை தண்ணீர் இல்லை கடன் வசதி இல்லை உர விலை உயர்வு காப்பீடு இழப்பீடு இல்லை வேளாண் துறை அதிகாரிகளின் உரிய ஆலோசனை இல்லை கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் எடை மோசடி என பகல் கொள்ளை நெல்லுக்கு உரிய விலை இல்லை போதிய இயந்திரங்கள் இல்லை என்கிற பல இல்லை அல்ல தொல்லை ஆகியவற்றில் போராடி விவசாயம் செய்யும் விவசாயிகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி சொல்வது போல வார்த்தை ஜாலமே உள்ளது விவசாயிகளுக்கு பயன் தராத புதிய புதிய திட்டங்களையும் அதன் மூலம் இவர்கள் கொள்ளையடிக்கவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது ரூபாய் 1775 கோடி காப்பீடு திட்டத்திற்கு அறிவித்து பயிர்க் காப்பீடு என்ற பெயரில் ஒரு பகல் கொள்ளையை கார்ப்பரேட் காப்பீடு நிறுவனங்கள் அரங்கேற்ற இந்த அரசு உதவி வருகிறது மேலும் கலைஞர் அனைத்து கிராம திட்டம் ரூபாய் 200 கோடி என அறிவித்து பெயருக்கு சில இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு மேற்படி தொகைகளை கொள்ளையடிக்கிறார்கள் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூபாய் 16 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் பெரும்பாலும் 90 சதவீதம் நகை கடனை வழங்கப்படுகிறது பயிர் கடன் 10% மட்டுமே வழங்குகிறார்கள் பயிர் கடன் வழங்க கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை அதுபோல வாய்க்கால்கள் தூர்வார பத்து கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது இதுவும் கண் துடைப்பு தான் தஞ்சாவூர் டெல்டா மட்டுமே 50 கோடி நிதி ஒதுக்கினால் தான் அனைத்து வாய்க்கால்களையும் பாதியாவது தூர்வார முடியும் எனவே இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையும் அளிக்கிறது.எனக் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *