புதூர் நாடு முதல் நெல்லிவாசல் நாடு வரை 9 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு..

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் புதூர்நாடு ஊராட்சியில் 9 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதூர்நாடு முதல் நெல்லிவாசல் நாடு வரை தார்சாலை மற்றும் சித்தூர் கூட்டு ரோடு பகுதியில் 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் மற்றும் நெல்லிவாசல் நாடு ஊராட்சி வலசை கூட்டு ரோடு பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.

இதில் திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜயா அருணாசலம், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *