தென்காசி மாவட்டத்தில் மல்லிகை மலர் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் மாவட்ட அளவிலான மல்லிகை மலர் சாகுபடி குறித்த கருத்தரங்கு விவசாயிகளுக்கு தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர்
எ.கே கமல் கிஷோர் துவங்கி வைத்தார் அதனை யெடுத்து மல்லிகை மலர் சாகுபடி தொழில் நுட்ப புத்தகம் வெளியிட்டார்

தென்காசி மாவட்ட
தோட்டக்கலை துணை இயக்குனர், ஜெயபாரதி மாலதி விவசாயிகளை வரவேற்று துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக் கூறினார்.

இப் பயிற்சியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து முனைவர் பழனி குமார் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் (தோட்டக்கலை) முனைவர் ஜெய் கணேஷ் (பயிர் நோயியல்) மற்றும் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் கடையநல்லூரிலிருந்து தோட்டக்கலை விஞ்ஞானி இளவரசன் மற்றும் பாலா சுப்ரமணியம் (பயிர் பூச்சியில்) கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மல்லிகை மலர் பயிரில் நடவு செய்தல், நோய் மேலாண்மை, பூச்சி மேலாண்மை,
உர மேலாண்மை மற்றும் குளிர் காலத்தில் அதிக மகசூல் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு தென்காசி மாவட்டம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர், மேலும் இதைத் தொடர்ந்து களப்பயிற்சி நாளை சங்கரன்கோவில் வட்டாரத்தில் நடைபெறும் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தென்காசி தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விவசாயிகள் மல்லிகை மலர் பயிரில் ஏற்படும் சந்தேகங்களுக்கு குருவிகுளம் வட்டாரம் தோட்டகலை உதவி இயக்குநர் கோபாலன்
8883909319, சங்கரன்கோவில் வட்டார தோட்டகலை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் 9042555915, மேலநீலிதநல்லூர் வட்டார
தோட்டகலை உதவி இயக்குநர்
சங்கரவேல் 9865473228, தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத் தப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *