ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் கிராமத்தில் 20 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா.
குத்தப்பாஞ்சான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் தலைமையில் நடைப்பெற்றது.

ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புராஜ், முன்னிலை வகித்தார்ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி ஹெச் பி மனோஜ் பாண்டியன் விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறத்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் போசுகையில் குத்தப்பாஞ்சான் ஊராட்சி மக்களின் கோரிக்கையினை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல் நோக்கு கட்டிடத்தை நான் பெருமிதம் கொள்கிறேன்

விரைவில் நியாவிலை கடை, அமைத்து தருவேன் என கூறினார்விழாவில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

அப்போதுஅரசு போக்குவரத்து மேலாளரிடம் நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வேண்டுமென
தொலை பேசியில கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவில்
ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ்,கணேசன், சேர்மக்கனி,பட்டமுடையபுரம் கண்ணன், சதன்ராஜ்குத்தப்பாஞ்சான் ஊராட்சி செயலாளர் அருணா சேகர், வார்டு பிரதிநிதி திருமுருகன்,துரைப் பாண்டிஊர்நாட்டமை அர்ஜுனன்,நடத்துனர் அருணாசலம், துரைப்பாண்டி சேர்மாராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *