தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்மேல்யழகியான் ஆராய்ச்சி மையத்தில் மாவட்ட வேளாண்மை மற்றும் சங்கரன்கோவில் வேளண்மைத்துறை அனுவலர்கள் இணைந்து நடத்தப்பட்ட பாரம்பரிய விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உழவர் திருநாள் விழா நடைப்பெற்றது.

கடைய நல்லூர் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பம்மாள் தலைமை தாங்கினார் சங்கரன் கோவில் வேளாண்மை துறை துணை இயக்குநர் அன்பு செல்வன் வரவேற்று பேசினார்

தென்காசி வேளாண்மை இணை இயக்குநர்
கோ. பத்மாவதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்க உரையாற்றினார்

மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் . பூங்கொடி ,
கனிமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

வேளாண்மை துணை இயக்குநர்
கணகம்மாள்,தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமச்சந்தினன், துணை இயக்குநர்
உதயகுமார், உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியல் துறை உதவி செயற் பொறியாளர் தொழில் நுட்ப உரை வழங்கினார்கள்.

இந்த விழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள்
துரைச்சாமியாபுரம் ஆர் செல்லத்துரை, அம்பை லெட்சுமி தேவி ஆகியோர் இயற்கை விவசாயம் செய்வது பற்றியும் அவர்களது விவசாய அனுபவத்தை கலைந் துரையாடினார்கள்.

அதனையெடுத்து ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பான்
செயல் விளக்கம் நடத்தப்பட்டது.

இந்த உழவர் திருவிழாவில் தென்காசி மாவட்டத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றனர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் கருத்துரை காட்சிகள் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஷேக் மைதீன் மற்றும் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *