திருவாரூரில் ஓ என் ஜி சி எஸ் சி எஸ் டி நல சங்கம் ஓஎன்ஜிசி பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட விளமல் பகுதியில் அமைந்துள்ள உள்ள தனியார் திருமண அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது அகில இந்திய ஓ.என்.ஜி.சி எஸ்சி எஸ்டி நலச் சங்கத்தின் சார்பில்
ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 29.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தையல் எந்திரங்கள் கல்வி உதவித்தொகை
மாற்றுதிறனாளி களுக்கான மூன்று கால் சக்கர சைக்கிள் ஆகியவற்றை
ஓஎன்ஜிசி செயல் இயக்குனர் உதய் பஸ்வான் பங்கேற்று வழங்கினார்.

முன்னதாக சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
சங்கத்தின் தலைவர் கங்காதரன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் பொது மேலாளர் பி .என் .மாறன் சப்போர்ட் மேனேஜர் நரேஷ் குமார் மனிதவள அதிகாரி முதன்மைமேலாளர் கணேசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கி பேசினர்.

அதனைத் தொடர்ந்து முதல்நிலை இரண்டாம் நிலை அதிகாரிகள் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கனகராஜ் ஓ பி சி தலைவர் சிவசங்கர் அதிகாரி சங்கத் தலைவர் ராமசாமி மகளிர் சங்கத் தலைவி முகிலா மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சிவகுமார் ராஜ்குமார் ராமராஜ் வேழவேந்தன் உத்திராபதி ரமேஷ்பாபு பிரபாகரன் அம்பேத்கார் ஆகியோர் பங்கேற்றனர்.

சங்கத்தின் தலைவர் கங்காதரன் பேசுகையில் நடப்பு ஆண்டில் மட்டும் கல்விக்காக. 20 லட்சம் உதவி தொகை வழங்குவதாக தெரிவித்தார். அமைப்பின்
செயலாளர் பாலசுப்ரமணியன் திட்டங்கள் பற்றியும் நோக்கங்கள் பற்றி பேசினார் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் சுமார் 30 லட்சம் ரூபாய் இந்த நலத்திட்டத்திற்கு செலவிடப்பட்டதாக பொறுப்பாளர்கள் கூறினர்

மருத்துவம் வழக்கறிஞர் பொறியல் படிக்கும் பட்டாதாரிகள் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார. தொகை ஆகியோரிக்கு உதவி தொகை வழங்கியது சிறப்பு வாய்ந்தது ஆண்டுதோறும் சங்கத்தின் சார்பில் நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குவது குறிப்பிடதக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *