செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மாத்தூரில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறகடித்து ஆடிய சின்னஞ்சிறு குழந்தைகள்..

தமிழக பட்டிமன்ற நடுவரும், திரைப்பட நடிகருமான பேராசிரியர் ஞானசம்பந்தர் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் அமைந்துள்ள காந்தி மிஷன் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆறாம் ஆண்டின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சின்னஞ்சிறு குழந்தைகளின் சிறகடித்து ஆடிய ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாடலுக்கு ஏற்றவாறு சிறுவர்கள் நடனமாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் தலைசிறந்த பட்டிமன்ற நடுவரும், திரைப்பட நடிகருமான பேராசிரியர் ஞானசம்பந்தர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.