அரியலூரில் அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர் மற்றும் அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் தபோர் சிங் யாதவ், செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024-ல் பொது நடத்தை தொடர்பாக அரசியல் கட்சிகள் செய்யக்கூடாதவை தொடர்பாகவும், தேர்தல் ஊர்வலங்கள், வாக்குப்பதிவு நாளான்று வாக்குப்பதிவு அமைதியாகவும், முறையாகவும் நடைபெறும் வகையில் ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பாகவும், நன்னடத்தை விதிகள் செய்யத்தக்கவையும் செய்யத்தகாதவையும் தொடர்பாகவும், வாகனங்கள் பயன்படுத்துதல் தொடர்பாகவும், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு சேகரிப்பு பணி முடிந்தபின் தொகுதியில் இருப்பது குறித்த கட்டுப்பாடுகள் குறித்தும், ஒழுங்கீனமான செயல்கள்ஃ தேர்தல் குற்றங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் கம்பிவட ஊடகங்கள் மூலம் அரசியல் சார்ந்த விளம்பரங்கள், சான்றிதல் வேண்டி விண்ணப்பித்தல் உள்ளிட்ட தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் தொடர்பான செலவினங்கள் குறித்து பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.95,00,000/- (ரூபாய் தொண்ணூற்று ஐந்து இலட்சம் மட்டும்) அதிகபட்ச தேர்தல் செலவினமாக இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது குறித்தும், மேலும் கணக்கு விவரங்களை சரிபார்த்தல், வாகனங்களுக்கான அனுமதி, அனுமதி பெறப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படாமை, பேரணிகள் பொதுக்கூட்டங்களுக்கான செலவுகள், ரூ.10,000/- த்திற்கு மேல் செய்யப்படும் செலவினங்கள் தொடர்பாகவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னரே அச்சடிக்கப்பட்ட வாங்கப்பட்ட பொருட்களுக்கான செலவுகள் தொடர்பாகவும், நட்சத்திர பிரச்சாரகர், நட்சத்திர பேச்சாளரின் செலவினங்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கான செலவின ஒதுக்கீடு குறித்தும், கணக்குகளை ஆய்வு செய்தல், ஊடக சான்றிழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆணைக்கு பதிலளிப்பது தொடர்பாகவும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்தல், பிரிவு.77 தேர்தல் செலவின கணக்குகள் உள்ளிட்டவைகள் குறித்தும் அரசியல் கட்சியினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண். 04329-299771, 04329-299769, 04329-299766, 04329-299756 என்ற தொலைபேசி எண்களிலும்;, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 425 9769 பொதுமக்கள் தெரிவிக்கலாம். கைப்பேசியில் cVIGIL செயலி வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்;வர்ணா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி.ராஷ்மி ராணி, இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) ராமலிங்கம், திருமதி.ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் (பெரம்பலூர்) சுந்தர்ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்திரசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) ராஜீ, உதவி ஆணையர் (கலால்) காட்டுமன்னார்கோவில், சந்திரகுமார் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.