அலங்காநல்லூர்,

தமிழ் நாகரிகத்தின் பாரம்பரிய மண், மதுரை, கீழடியில் ஏப்ரல் பூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் வகையில் மதுரை பசுமை நண்பர்கள் சார்பாக தமிழ் மண்ணின் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் விழா கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலகணேஷ், பாரம்பரிய நெல் பாதுகாவலர் கருணாகர சேதுபதி, பசுமை நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பொன் குமார், நிர்வாகிகள் யோகராஜ், சண்முகம் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் பசுமை நண்பர்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் புல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *