இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் கடந்த 75 ஆண்டுகளாக அண்ணன் தம்பிகளாக,உறவினர்களாக பழகி வந்த நிலையில்,இதில் பிரவினையை தூண்டி மீன் பிடிக்கலாம் என பா.ஜ.க.நினைப்பதாக பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி குற்றசாட்டு…

கோவையில் மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணகத்தை போற்றும் வகையில் சமத்துவ இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைதி நிலவவும்,சகோதரத்துவம் மற்றும் மனித்நேயம் வளர இது போன்ற நிகழ்ச்சிகள் நாட்டிற்கு அவசியம் என குறிப்பிட்டார்..

தொடர்ந்து பேசிய அவர்,இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பிரதமர் மோடிக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறிய அவர்,அந்த பதற்றத்தில் பிதற்றி கொண்டு உளறி கொண்டு இருப்பதாக கூறினார்..

தேர்தல் அறிக்கை வெளியான போதே பா.ஜ.க.வின் தோல்வி இறுதியாக இருப்பதாக கூறிய அவர்,கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை,இந்த பத்து ஆண்டுகளில் ஆண்ட பா.ஜ.க.மக்களின் மீது விதித்த ஜி.எஸ்.டி போன்ற வரிகளால் சிறு குறு தொழில் செய்தோர் வாட்ச்மேனாகவும்,கால் டாக்சி ஓட்டுனர்களாக மாறிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்..

ஏழை நடுத்தர மக்களை இன்னும் பின்னோக்கி கொண்டு வந்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்..பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கூறிய காவிக்கோட்டையாக மாற்றுவோம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் அண்மையில் அண்ணாமலை கூறிய கோவையில் வெப்பத்தின் அதிகரிப்பு குறித்து சுட்டி காட்டி பேசிய அது போன்று வெப்ப அதிகரிப்பால் பித்தம் அதிகரித்து தமிழக பா.ஜ.க.வேட்பாளர்கள் பேசுவதாக தெரிவித்தார்..

காவி என்பது கோவிலுக்கு சாதரணமாக உடுத்தி செல்லும் ஆடை எனவும்,இது போன்று பேசி தமிழகத்தில் பிரிவினையை தூண்டுவதாக கூறிய அவர்,75 ஆண்டுகளாக அனைத்து சமுதாயத்தினரும் அண்ணன் தம்பிகளாக உறவினர்களாக பழகி வருவதாக பெருமை தெரிவித்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *