இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்
புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக குச்சிபாளையம் ரமேஷ் (எ) மணிவேல் தலைமையில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில்
இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 500 மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும், 500 மேற்பட்டவர்களுக்கு போர்வையும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் திருபுவனை வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபாலன், மணிமாறன், பாண்டுரங்கன், மணிபாலன், ரவி, திருமலை, அழகிரி, அமிர்தலிங்கம், சத்தியா, சக்திவேல், சதீஷ், சந்தோஷ், அய்யனார், வீரமுத்து, தேவன், பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்