புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி மாநில தலைவி தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V.P.ராமலிங்கம் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார் , லட்சுமிநாராயணன் , மாநில துணைத்தலைவர் ஜெயலட்சுமி, மாநில துணைத் தலைவர் பழனி , மாநில செயலாளர் தமிழ்மாறன் , மாநில செயலாளர் ஹேமாமாலினி , மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன் , தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழக்கறிஞர் கார்த்திகேயன் , ஊடக பிரிவு பொறுப்பாளர் நாகேஸ்வரன், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் சுகுமார் , மணவெளி தொகுதி தலைவர் பிரகாஷ் , உள்ளிட்ட மகளிர் அணி மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் விஜயலக்ஷ்மி மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை தொகுத்து வழங்கினார். இறுதியில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் பிரியா நன்றி கூறினார்.