மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள குளிர்பான கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இவர்களின் தாகம் தீர்க்க இளநீர், தர்ப்பூசணி, கிர்ணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

முதியவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகி ஆங்காங்கே மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அனல் காற்று வீசுவதால் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வெப்பத்தின் காரணமாக உடல் முழுவதிலும் கடுமையாக வேர்வை உருவாகி உடல் சோர்வு ஏற்பட்டு பலவீனம் அடையும் நிலை உருவாகி வருகிறது.

மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொது மக்கள் வெளியே நடமாடு வதை தவிர்த்து வீடுகளுக்குள்ளே முடங்கும் நிலை காணப்படுகிறது. மேலும் மதுரை நகர் பகுதி முழுவ தும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உபாதைகளால் பாதிக்கப்பட கூடிய நிலையும் அதீதவெயிலின் தாக்கத் தால் ஆங்காங்கே பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. மதுரையில் கோடை வெயிலால் தாகத்தை தீர்த்து கொள்ள குளிர்பான கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இவர்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் தாகம் தீர்க்கும் இளநீர், தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள் இளநீர் உள்ளிட்ட கோடையில் குளுமை தரும் இயற்கையின் பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அதிக அள வில் பொதுமக்கள் தேடிச் செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து மீளும் வகையில் தலையில் துணி களை போர்த்தியபடியும், குடைகளை பயன்படுத்தி யும் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர். தொடர் வெயிலின் தாக்கத்தால் வெயிலால் உருவாகும் வெப்ப நோய்களாலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து வீசும் அனல் காற்றால் ஆட்டோ ஓட் டுனர்கள் வாகனங்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கும் நிலையும் உள்ளது. மதுரை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெயிலின் தாக்கத் தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கிருஷ்ணன் கூறுகையில், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால், குழந்தைகளை கவன மாக பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் அதிக மாக கொடுக்க வேண்டும் நார்சத்துள்ள பழங்களை வழங்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவம னைக்கு சென்று டாக்டரின் ஆலோசனைப்படி மருத்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மதுரையில் கடந்த சில நாட்களாககோடை வெயிலின் தீவிரம் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்றைய தீவிர வெயிலால் நகர், புறநகரின் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைந்திருந்தது.
சாலைகளில் நடக்க முடி மருத் யாத அளவிற்கு அனல் அடிக்கிறது. இரவிலும் வெப் பத்தின் தாக்கம் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முதல் மே 1 ம் தேதி வரை மதுரைக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை காய்ச் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதி கரிக்கக்கூடும் என்பதோடு, வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *