முப்பெரும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் “மே தின விழா” “நடிகர் அஜித் பிறந்தநாள் விழா” “ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கூட்டம்” மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன், சமூக சேவகர் குமரேசன், மேக்கப் & நடிகை ப்ரியா, சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா இணைந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. கலைக் குழுவின் கூட்டம் முடிந்தவுடன் நடிகர் மீசை மனோகரன் அனைவருக்கும் உளுந்தவடை, தேனீர் வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா செய்தார்கள். முடிவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவ சத்யா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *