பண்ருட்டியில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம்
பண்ருட்டி அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் புல முதல்வர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

.இதில் ஆண்டு அறிக்கையை புல முதல்வர் முனைவர் முத்துக்குமரன் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சிறப்புரை துணை கண்காணிப்பாளர் பேசியதாவது பொறியில் கல்வியில் அன்றைய சேர்க்கை மதிப்பெண் நடைமுறையையும் இன்றைய கல்லூரிகளின் எண்ணிக்கையையும் சேர்க்கையையும் தாம் படித்த காலத்தோடு ஒப்பிட்டு பொறியியலின் தாக்கத்தை எடுத்துரைத்தார்கள்.


மேலும் நற்பண்புகளுடன் கூடிய கடின உழைப்பு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிறந்த பொறியாளராக உருவாக முடியும்
தன்னம்பிகையுடைய கல்விதான் உயர்த்தும் என்றும் சமூதாய அவலங்களான போதை பொருட்களை ஒழிப்பதோடு அவற்றை தொடரும் மனிதர்களிடமிருந்து விலகி நல்ல சமூதாயமும் சிறந்த ஒளிமயமான எதிர்காலத்தை படைத்திட மாணவர் சமூகம் விழிப்புடன் தொடர் பணியாற்றிட வேண்டுகோள் விடுத்து சிறப்புரையாற்றினர்.

மற்றும் பல்கலை கழக துணைத் தலைவர்கள் முனைவர்கள் சுரேஷ்குமார்,சீனுவாசன்,
மங்கையர்கரசி, உமா முருகானந்தன்,
உடற்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவகார்த்திக், உடற் பயிற்சி இயக்குனர் முனைவர் அசோக்குமார் உட்பட பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நாட்டுநலப் பணி திட்ட அலுவலரும் இயந்திரவியல் துறை தலைவருமான முனைவர் மாலா மற்றும் முனைவர் ஆரோக்கியசாமி,திட்ட மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *