திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்திற்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி ஏராளமானோர் சாமி தரிசனம்

திருவொற்றியூர் காலடி பேட்டையில் சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும். 500 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் தொடங்கப்பட உள்ளது. மே மாதம் இருபதாம் கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் 10 நாள் பிரம்மோற்சவத்திற்கு
முன்னதாக கோவிலில் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

பக்தர்கள் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் பந்த காலுக்கு அபிஷேகம் செய்து நவதானியமிட்டு கோவில் நுழைவாயிலில் பந்த கால் நட்டனர் இதனைத் தொடர்ந்து இருபதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் உற்சவத்தில் உற்சவர் பவள வண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காலை மாலை இருவேளையும் ஒவ்வொரு வாகனங்களில் நான்கு மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்

முக்கிய நிகழ்வான கருட சேவை மே மாதம் 22 ஆம் தேதியும் திருத்தேர் 26 ஆம் தேதியும் புஷ்ப பல்லாக்கு 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது
கடந்த 2006 ஆம் தேதி நடைபெற்ற பிரம்மோற்சவம் கோவில் ராஜகோபர கட்டும் திருப்பணியால் தடைபட்டிருந்த நிலையில்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவில் ராஜகோபுரம் திருப்பணி நிறைவு பெற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றதால் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் தொடங்கப்பட உள்ளது

காஞ்சிபுரம் காலடிப்பேட்டை மீஞ்சூர். பகுதிகளில் ஒரே நாளில் நடைபெறும் கருட சேவை உற்சவத்தை காண்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுமா என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *