தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்பு இல்லத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மரம் நடும்விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் தங்களது இல்லத்தின் பின்புறம் மரங்களை நட்டு வைத்து ஓய்வு நேரத்தில் பராமரித்தும் வருகின்றனர்.

இந்த மரம் நடு விழாவிற்கு தென்காசி மாவட்டம் ப்ராணா மரம் வளர் அமைப்பு குழுவினர்கள் கலந்து கொண்டு முதியவர் களுடன் மரங்களை நட்டனர்.
மேலும் ப்ராணா மரம் வளர்ப்பு அமைப்பு குழுவினர் மரம் வளர்ப்பு குறித்தும் மரத்தின் தேவைகளை குறித்தும் முதியவர்களுக்கும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த ப்ராணா மரம் வளர் அமைப்பு குழுவினருக்கு அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தைச் சார்ந்த முதியவர்கள் மற்றும் பசியில்லா தமிழகம் நிறுவனர் முகமது அலி ஜின்னா மற்றும் ஜமீமா பேகம் மற்றும் நிர்வாகி செய்யது அலி பாத்திமா ஆகியோர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *