அணைக்கட்டு, ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளியில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் அணைக்கட்டு தாசில்தார் அவர்களை சமாதானம் செய்து கோயில் பூட்டை உடைத்து புது சாவி வழங்கி திருவிழா நடத்த அனுமதி அளித்தனர்.

வேலூர் மாவட்டம், அகரம் அருகே உள்ள தோளப்பள்ளி கிராமத்தில் ஆண்டுகள் தோறும் மே மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைப்பெறுவது வழக்கம். இது கடந்த 50 ஆண்டுகளாக ஊர் தர்மகத்தா ராஜசேகர் என்பவர் தலைமையில் நடைபெற்று வந்தது. இதன்பின் கொரோனா காலகட்டத்தில் அதே பகுதியே சேர்ந்த சோபா பாரத் என்பவர் தலைமை வகித்து நடத்தி வந்தார். இதில் பல்வேறு ஊழல்கள் நடந்து இருப்பதாக கூறி இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனிடையே இந்த ஆண்டு கோயில் திருவிழாவை நடத்த கூடாது என்று சோபா பாராத் தரப்பினர் கோயிலுக்கு பூட்டு போட்டு சாவி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. எனவே மற்றொரு தரப்பினர் திருவிழா நெருங்கி விட்டதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாமல் தவித்தது வந்தனர். இதன்பின் கடந்த 30-ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சு வார்த்தை முடிந்து ராஜசேகர் தரப்பினர் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி சுமூகமாக முடித்து.

மேலும் சோபா பாரத் என்பவர் கோயில் சாவியே தாசில்தாரிடம் கடந்த 1-ம் தேதி ஒப்படைப்பதாக கூறி இருந்தார். ஆனால் 2 நாட்கள் கடந்தும் ஒப்படைக்காத காரணத்தால், மீண்டும் ஊரில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க பூட்டப்பட்டு இருந்த கோயிலில் பூட்டை உடைத்து புதிய பூட்டு போட்டு சாவியை அந்த ஊர் தர்ம கத்தா ராஜசேகர் என்பவரிடம் ஒப்படைத்தார். மேலும் இது சம்பந்தமாக மீண்டும் ஊரில் ஏதாவது தகராறு ஏற்பட்டால் எப்போதும் திருவிழா நடத்த முடியாதது போல் கோயிலை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து சென்றார். இதில் வருவாய் துறையினர் வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *