ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன

சென்னை மீஞ்சூரில் கடும் வெயிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சச்சின் (25), ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *