அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், இந்திய விவசாயிகளின் நம்பிக்கைக் குரியவருமான தோழர் அதுல் குமார் அஞ்சன் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை காலை 4 மணி அளவில் லக்னோவில் (உத்திரபிரதேசம் மாநிலம்) இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக. பணியாற்றி வந்தவர்

ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கான பல்வேறு பரிந்துரைகளை முன்மொழிந்தவர் ஆவார். இவர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மிகச் சிறந்த பேச்சாளர் ஆவார் உரைநடையும் உருவ அசைப்பும் காண்போரை பிரமிக்க செய்யும். எண்ணற்ற ஆய்வு செய்து அதற்கான ஆதாரங்களை திரட்டி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிய வல்லமை கொண்டவர்

டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தலைமை குழுவில் இடம் பெற்று வழி நடத்தியவர். போராட்டத்தின் பிற் பகுதியின் போது தான் உடல் நலிவுற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லக்னோ மியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நம்மிடமிருந்து உடலால் பிரிந்து விட்டார். ஆனாலும் உணர்வோடு நம்முடன் வாழ்கிறார் தொழிலாளர்கள் விவசாயிகள் இன்னபிற உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க களமாடியவர் மிகச்சிறந்த போராளியை நாம் இழந்து நிற்கிறோம். அவருக்கு இணையாக நாம் எப்படி களப்பணி ஆற்ற போகிறோம்

விவசாயிகள் இயக்கத்தின் பெருமைமிக்க தலைவர் இந்திரா தீப் சின்காவின் மகள் பாரதியை தன் இல்லற வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார் .இவர்களுக்கு அன்பு மகள் ஒருவர் இருக்கிறார்

இடதுசாரி இயக்கங்களுக்கே உரிய அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று பொது வாழ்வில் வாழ்ந்து காட்டிய தோழர் அதுல்குமார் அஞ்சன் மறைவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி வீரவணக்கம் செலுத்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

அவரது இறுதி நிகழ்வுகள் நேற்று 04/05/2024. லக்னோ நகரில் உள்ள சிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செங்கொடிகளை தாழ்வாக பறக்கச் செய்து, மாலை அனைத்து மாவட்டங்களிலும் அவரது உருவப்படத்தை வைத்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் திருவாரூர் பழைய ரயில்வே நிலையத்திலிருந்து அமைதி பேரணி துவங்கி புதிய ரயில்வே நிலையத்தின் முன் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தோழர் வை_சிவபுண்ணியம்

நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வை_செல்வராஜ்,

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே_மாரிமுத்து,

சிபிஐ பொறுப்புச் செயலாளர் எஸ்.கே சவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் (சிபிஎம் )எஸ்.தம்புசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கே. உலகநாதன் (முன் எம் எல் ஏ), விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்
ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். சந்திரசேகரஆசாத் மக்கள் அதிகாரம் சண்முகசுந்தரம் இளைஞர் பருமற்ற மாவட்ட செயலாளர் துரை. அருள்ராஜன் புகழஞ்சலிசெலுத்தினர்

அனைத்து கட்சி தோழர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *