தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6வது மாநில மாநாடு. விஜி.சந்தோசம் பங்கேற்பு

செங்குன்றம் செய்தியாளர் 

மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6 வது மாநில மாநாடு சென்னை வானகரம் (இயேசு அழைக்கிறார் ) விங்ஸ் கண்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ள வணிகர் தின மாநாடு வணிக போராளி மாநில தலைவர் கொளத்தூர் த. ரவி  தலைமையில் சென்னை மண்டல தலைவர் அருணாசல மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஜி சந்தோசம், நீதி அரசர் கே .சந்துரு எஸ்.வி. சேகர் பழ. கருப்பையா உட்பட யாழிசை திரைப்பட நடிகை ராஜலக்ஷ்மி பரதநாட்டியம் துவக்கத்துடன்  ஆரம்பித்த இந்த விழாவில் தலைமை நிலைய செயலாளர் கே .குழந்தைவேல் எம். ஜி .பி ஜுவல்லரி தி .நகர் ,எம் .கிரி பிரசாத், ஜே .கே. பிலிம்ஸ் ஆர் .ஜெயக்குமார் ,தொழிலதிபர் த.அருண் , வி.பத்மராஜ் ,ஆர் .பெருமாள் ஆர் . ராமராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த மாநாட்டில் அரிசி, கோதுமை,உணவு பொருட்களின் ஜிஎஸ்டி வரியை நீக்குதல் அந்த வரியின் மீது செஸ்,சர்சார்ஜ், வரியை நீக்கவும், மே 5 ம் தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும்,60 வயதை கடந்த பின் வேலை செய்ய முடியாத சிறு வணிகர்கள் நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்கவும் வணிகர்கள் சமூகவிரோத கும்பல்களால் தாக்கப்படுவதை கண்டித்து பாதுகாப்பு தனி திட்டம் அமைக்கவும், கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அனைத்து பொருட்களின் விலையை கட்டுப்படுத்துதல் போன்ற 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழகம் முழுவதும் மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *