தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி
வாக்கோ இந்தியா தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான போட்டிகள் கடந்த மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனையர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான பிரிவில் இறுதி போட்டியானது ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணி அளவில் சென்னை அணி கோயமுத்தூர் அணியை வீழ்த்தி சென்னை அணியை சேர்ந்த நிவேதா சீனிவாசன் மீண்டும் தங்கத்தை பெற்றார்.
தங்கம் வென்ற நிவேதா சீனிவாசன் மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வருகின்ற ஜூன் 10ம் தேதி முதல் 14 ஆம் தேதி பங்கு பெற உள்ளார் என குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் பொது செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அமைச்சூர் கிக் பாக்சிங் உறுப்பினர் ஆர்த்தி அருண் பதக்கங்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.