சிவகங்கை மாவட்டம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சிறுவர்களுக்கான கோடைகால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது –
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 02.04.2024 முதல் தொடங்கப்பட்டு இரண்டு கட்டங்கள் பயிற்சி நிறைவு பெற்று மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெற்றுக் வருகிறது.

இப்பயிற்சிக்கு 12 நாட்களுக்கு கட்டணம் ரூ. 1,500/- + (18% GST) ஆகும். இத்தொகையினை Phone pay, Gpay, Debit card, Credit card மூலம் POS machine வழியில் செலுத்தலாம். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருத்தல் வேண்டும்.
மேலும், தினசரி நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நேரங்களாக காலை வேளையில் 07.30 A.M. முதல் 08.30 A.M மற்றும் 08.30 A.M. முதல் 09.30 A.M, மாலை வேளையில் 03.30 P.M. முதல் 04.30 P.M. மற்றும் 04.30 P.M. முதல் 05.30 P.M. வரையிலும் கற்றுக்கொடுக்கப்படும்.

கூடுதல் விபரங்களுக்கு 04575 – 299293 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அலுவலகத்தினையும், 9786523704 என்ற அலைபேசி எண்ணில் நீச்சல் பயிற்றுநரையோ அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், திறந்த வெளி விளையாட்டரங்கம், R.D.M.. கல்லுாரி அருகில், மானாமதுரை ரோடு, சிவகங்கை – 630 561 என்ற முகவரியிலோ நேரில் தொடர்பு கொண்டு, நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் உரிய பயிற்சித்தொகையினை செலுத்தி கற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *