பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் மாணவி தேவிலலிதா 596 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் முதலித்தையும், கோவை மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

அதேபோல் அதே பள்ளியில் படித்த மாணவன் ஸ்ரீநிதின் 593 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடமும்,கோவை மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தும், சால்வைஅணிவித்தும் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பள்ளி 12 ஆண்டுகளாக 100சதவீதம் தேர்ச்சியை வழங்கி வரும் இந்த பள்ளிகள் படித்து சாதனை புரிந்த மாணவி தேவிலதா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறுகையில்:-
என் பெயர் தேவிலலிதா நான் வந்து நாச்சியார் வித்யாலம்பள்ளியில் படிக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த ஸ்டேட் போர்டோட ரிசல்ட் வந்தது 12த் ரிசல்ட் வந்ததுஅதில்ஷ பொள்ளாச்சியில் முதலிடமும், கோயம்புத்தூர் மாவட்ட அளவில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளேன்.

இதற்கு எனது பெற்றோருக்கும் எனது ஆசிரியருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது ஆசிரியர்கள் அனைவரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன் நான்இஸ்ரோவில் வில் வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்
ஸ்ரீநிதின் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
நான் 15 ஆண்டுகளாக இந்த பதிவு படிக்கிறேன். இந்தப் பள்ளி நிர்வாகம் எனது குடும்பம் மாதிரி. பொள்ளாச்சி அளவில் இரண்டு நாட்களுக்கு முன்புஸ்டேட் போர்டோட ரிசல்ட் வந்தது பொள்ளாச்சியில் இரண்டாவது இடமும் கோவை மாவட்ட அளவில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன் எனது திட்டம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது,ஜேஇஇ முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று இறுதி கட்ட நினைவு தேர்வுக்காக காத்துள்ளதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *