தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதில் இருந்த முட்டுக்கட்டைகளைப் போக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிதாகப் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டுவதற்கும் பழைய வழிபாட்டுத்தலங்களைப் புதுப்பித்துக் கட்டுவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்என்கிற விதியில் பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் இருந்து வந்தன. 

இந்த சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்று  2024 பிப்ரவரி 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்குக் கோரிக்கை வைத்துப் பேசினேன். 

எனது கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலனை செய்து தமிழ்நாடு முதல்வர் தளபதிஸ்டாலின் அவர்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி பெற பொதுவானசெயல்பட்டு வழிமுறை ஒன்றினை வகுத்துத் தந்துள்ளார்கள். அந்த ஆணையைத் தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின்ச ம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. 

வழிபாட்டுத் தலங்கள் கட்ட தடையில்லா சான்று பெறக் கோரும் விண்ணப்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிவுகளைச்சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு மேல் அந்த கோரிக்கையை நிலுவையில் வைத்திருக்க முடியாது. கோரிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

மிக நீண்ட நாள் கோரிக்கைக்கு நல்லதொரு தீர்வினை வழங்கி இருக்கும் திராவிட மாடல் ஆட்சியினை செல்வனேநடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின்சார்பிலும் தமிழ்நாட்டின் சிறுபான்மையின மக்கள் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *