முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனிலையில் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டன முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலதண்டாயுதம் தலைமையில் கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், , உதவி இயக்குநர் பதிமந்தன்ஆனையாளர் ஜானகி ஆகியோர்முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் அந்தோணி அனைவரையும் வரவேற்றார்.
மொத்தம் 16 தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றப்பட்டன கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் காலோன் பேசும்போது ஊராட்சியின் அனைத்து வரவுசெவுகளை கண் காணிக்கும் பொறுப்புளை ஊராட்சி செயலர் பார்த்துக்கொள்கிறார் கால்நடைத்துறை. வேளாண்மை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் தங்களது துறைகளில் உள்ள மக்களுக்கான திட்டங்களை எடுத்துக் கூறினார்கள்.
அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுவர்களை6 வயது வரைக்கும் அங்கன்வாடியில் விடவேண்டும். அப்போதுதான் தவறு நடக்காமல் பாதுகாக்கப்படும் . குழு உறுப்பினர்கள் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு செயல்பட வேறும் கேள்வி: மகிண்டி கிராமத்தில் தெருவிளக்கு குடிநீர், சாலை வசதி தேவை என கேட்டறிநத்தார்.
மகிண்டி ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் எஸ்.பூபதி மணி சாலை வசதி கேட்டு மனு கொடுத்துள்ளர். அது பரிசீலிக்கப்படும் என்றார் கிராமசபா கூட்டத்தில் திட்ட மேலாளர் கண்ணதாசன், ரெகுலர் மேனேஜர் ஜெயராம். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கரன், வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், கால்நடை உதவி இயக்குநர். சுந்தரமூர்த்தி, ‘மகின்டிகிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.